உண்மை தான்....காலம் காலமாக ஒரு கருத்தை...சரியா தவறா என்று அறியாமல்....தமக்குப் பிடித்த தலைவரோ,நடிகரோ,பிரமுகரோ சொல்லி விட்டால் அப்படியே நம்பிவிடுவது மட்டுமில்லாமல்....அரசாங்கத்தையே அல்லவா தாரை வார்த்தோம்...ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மாறி..மாறி...கலை உலகத்தினரை கடவுள் போல் பாவித்தோம்...ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எதிர்க் கேள்வி கேட்கவும் அதே கலை உலகம் சார்ந்தவரையே நம்பினோம்.....கமல் அவர்களின் கூற்றில் கம்யூனிசமும் கலந்திருப்பதால், வார்த்தை ஜாலங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.நாட்டில் குற்றங்கள் என்பது,பொருளாதாரம் தாண்டி,கிட்டத்தட்ட அனைத்து மட்டங்களிலும் புற்று நோய் போலப் புரையோடிக் கிடக்கிறது. எஞ்சின் ,பெட்டிகள் மட்டுமின்றி,தண்டவாளங்களும்...சீர் செய்யப்பட்டால் தான் ஜனநாயகம் எனும் ரயில் சீராக ஓடும்.
Sunday, 19 November 2017
Sunday, 5 November 2017
இந்து தர்மம்
கடந்த முறை சந்தித்த இயற்கையின் சீற்றத்தின் போதும்,ஐல்லிக்கட்டை மீட்க வேண்டி ஒருங்கிணைந்த போதும்,மதம்,ஜாதி,மொழி தாண்டிய ஒற்றுமையை உணர்ந்தோம்.தமிழக மக்களிடையே எந்தப் பாகுபாடும்,வேறுபாடும் இல்லை என ஆணித்தரமாக உறுதி ஆயிற்று..ஆனால் நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும்,நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் அவரவரது கடமைகளை அன்றாடம் ஒழங்காகச் செய்யாமல், சாதாரணமாகப் பெய்யும் பருவமழையினைக் கூட சரியான விதத்தில் எதிர்கொள்ளாமல், மக்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள்.
ஊடகங்களில் எது உண்மை என்பதே தெரியவில்லை. அனைத்து மதங்களும்,சமயங்களும் மனிதம் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவே வலியுறுத்தி இருக்கின்றன. தங்களை அறிவுஜீவிகளாக நினைப்பவர்களும், பகுத்தறிவாளர்களாக காட்டிக் கொள்பவர்களும். எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும்....ஆதிசங்கரர், இராமனுஜர்,மத்வாச்சாரியார், மகாப்பெரியவர் போன்ற மகான்கள் கட்டிக் காத்த இந்து மத த்தின் தற்போதைய தலைவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் நாவடக்கத்தோடு பேசுவது மட்டுமின்றி....தேச,உலக அமைதிக்கான காரியங்களில் மட்டுமே பாடுபட வேண்டும் என்பதே என் போன்ற சாமான்ய இந்திய இந்துக்களின் தாழ்மையான வேண்டுகோள்....
கணேசலிங்கம் செண்பகம்
கே.கே.நகர், சென்னை78
செல்:9840827369
Wednesday, 25 October 2017
கடன்
நம்மில் ஏராளமானோர் வாழ்க்கையில் இது போலப் போராடிக் கொண்டே தான் இருக்கிறோம்..."கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் "...ஞாபகம் வருகிறது...சாமான்ய மக்களின் தேவைகளையும்,சூழ்நிலைகளையும் ,தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு, அநியாய வட்டி வாங்குவது ,சேட்டுகள்,ரவுடிகள் மட்டுமல்ல..கலர் கலராக...கிரெடிட் கார்டு களை நம்மிடம் கொடுத்து விட்டு..கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் வங்கிகளும் தான்....ஆனால் நாம் உணர வேண்டியது..." தீதும் நன்றும் பிறர் தர வாரா"....
Monday, 16 October 2017
காதல்
கண்களும் காதலும் கற்பனையும் ஒன்றை யொன்று ஈர்ப்பதால் தானே கவிதையே பிறக்கிறது..இப்புவி உயிர்ப்புடன் இருப்பது...உயிர்களின் காதலால் தானே...
Thursday, 28 September 2017
ஆண்மை, பெண்மை, ஆளுமை
ஆண்மை,பெண்மை ...இரண்டிற்குமே வெவ்வேறு விதமான தனித்தன்மைகள் உள்ளன.ஆளுமை குறித்துப் பேசும் போது தான் சர்ச்சைகள் தோன்றுகின்றன.
"ஆண்மை தவறேல்" என்று கூறிய பாரதி தான்..."மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்ய வேண்டும்" எனவும் "மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோவோம்" என்றும் கூறினார்...எது உயர்ந்தது ...தேவை என்பதெல்லாம் காலம்,தேசம்,இனம்...இன்ன பிற சூழல்களைப் பொறுத்து மாறுபடும்;வேறுபடும்...மிஷ்கின், திரையுலகில் மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்..பாடல் இல்லாமல், வசனமே இல்லாமல் படங்கள் வருவதெல்லாம் ஒரு பரிசோதனையே..!..இதில் ஆண்மை...பெண்மை..ஆளுமை குறித்த ஏற்றத் தாழ்வுகளை ஏன் இழுக்க வேண்டும்!
-கணேசலிங்கம் செண்பகம்
Monday, 25 September 2017
ஈகோ...
"Ego" என்பது இறங்கி வராமல் இருப்பது; "தன்மானம்" என்பது இறங்கி விடாமல் இருப்பது.! ..வேறுபாடு புரியாமல் தான் நம்மில் பலர் நல்ல உறவுகளையும், நட்புகளையும் இழக்கிறோமோ!!
Saturday, 16 September 2017
மார்புப் புற்று நோயில் மகவைப் பிரியவிருக்கும் தாய்க்கும்,தெய்வத்திற்குமான போராட்ட தருணத்தில்...
வலி தரக்கூடிய வலிமையான வரிகள்..!!. தாய்மையின் தவிப்பை சாதாரணமாக சமாதானமோ, சமரசமோ செய்துவிட முடியாது...தாயும் தெய்வமும் வேறு வேறு வடிவங்கள் அல்ல...இரு கடவுள்களுக்குள் நடக்கும் யுத்தத்தில் வெல்வது விதி என்றாலும்.. இது போன்று விடை தெரியாத புதிர்கள் இப்புவியில் ஏராளம்.
Wednesday, 23 August 2017
இன்றைய தலைமுறை
சின்னச் சின்ன விஷயங்களில் பிடிவாதம் என்பது, சிறுவயதிலேயே பழகிவிட்ட தீய குணங்களில் ஒன்று. தவிர...இக்காலத்து இளம் தலைமுறையினருக்கு, சொல் புத்தி சுத்தமாகப் பிடிப்பதில்லை...சுயபுத்தி தமக்கு நிறையவே இருப்பதாக எண்ணிக் கொண்டு பல தருணங்களில் இது போல குடும்பத்தினரிடம் மட்டுமின்றி, அலுவலகத்தில்,நண்பர்களிடத்தில், புகுந்த வீட்டில் என்று எல்லா இடங்களிலும் வாக்குவாதம் செய்து பரஸ்பரம் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்..அடிப்படையில், குழந்தைப் பருவத்தில் பெற்றோர் செல்லம் கொடுத்து வளர்ப்பது ஒரு காரணமாக இருந்தாலும்,வளர வளர...ego, ஆளுமை என்ற பெயரில் தான் தோன்றித் தனமாக நடந்து கொள்கிறார்கள். முன்பெல்லாம் பள்ளிகளில் "நீதி போதனை" என்று வாரத்தில் ஒரு பீரியட் இருக்கும் .வீடுகளும் கூட்டுக் குடும்பமாக இருந்த காலங்களில் தாத்தா பாட்டி, அத்தை சித்தப்பா,பெரியப்பா என்று பந்தமும், பாசமும் சூழ...பெரியர்களிடம் "மரியாதை" செலுத்தும் குணம் இயல்பாகவே அமையப் பெற்றிருக்கும்....இன்றைய தலைமுறையினர் கல்வி,தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று பல விதங்களிலும் நிறையவே முன்னேறி இருந்தாலும்...."குணங்கள் " "கலாச்சாரம்" என்பது வேறுவிதமாக மாறிவிட்டது...பெரியவர்கள் தான்...எல்லாத் தருணங்களிலும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டிருக்கிறார்கள்...இது தான் நிதர்சனம்...ஆனால் இன்றைய தலைமுறையினர் நல்லவர்களாகவும்,வல்லவர்களாகவும் தான் இருக்கிறார்கள் என்பதற்கு... சமீபத்திய "சென்னை வெள்ள நிவாரணம்" "ஜல்லிக்கட்டு அறவழிப் போராட்டம்" இரண்டு நிகழ்வுகளும் நம்பிக்கையான உதாரணங்கள்....நம் அரசியல்வாதிகளும், அரசாங்கங்களும் நேர்மையாக இருந்திருந்தால்...நம் இளைஞர்கள் நம் நாட்டை எப்பொழுதோ வல்லரசாக மாற்றியிருப்பார்கள்...!!
கணேசலிங்கம் செண்பகம்
செல்: 9840827369
Sunday, 16 July 2017
Big boss
"பிக் பாஸ்" நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒரே துறை என்பது தவிர, எந்த இரத்த சம்மந்தமும் இல்லாதவர்களின், "புற" மற்றும் "அகம் "சார்ந்த உணர்வுகளை,விதவிதமாக விமர்ச்சிக்கும் நாம்...நம்முடைய நிஜக் குடும்பத்தில் எவ்விதம் நடந்து கொள்கிறோம் என்பதையும்... அலசிப் பார்த்து, நம்முடைய அகப்பேய்களையும் அடையாளம் கண்டு ,விரட்டவும்....சமையல் முதல், கழிவறையைச் சுத்தம் செய்வது வரை, நாமும் பங்கெடுத்துக் கொள்ள முற்படுவதோடு, புறம் பேசுவதனால் உண்டாகும் விளவுகள் பற்றியும்,EGO,போட்டி பொறாமைகளின் கேடுகள் பற்றியும் சிந்திப்பதோடு....அவ்வப்போது ஆடல் பாடல்கள் போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுவதால் உண்டாகும் மகழ்ச்சி குறித்தும்.... அறிந்து கொள்வது ஆரோக்கியம் என்று கருதுகிறேன்...
பின்குறிப்பு: வெறும் நூறு நாட்களே பங்கேற்கப் போகும் வீட்டு உறுப்பினரைக் காசு கொடுத்து கோடிக் கணக்கான ஓட்டுக்கள் போட்டு ஜெயிக்க வைக்கும் நாம், ஐந்து முழு வருடங்கள் நம்மை ஆளப்போகும்...நாட்டு உறுப்பனரைக் காசு வாங்கிக் கொண்டு தவறான முறையில் தேர்ந்தெடுப்பது நியாயம் தானா என்றும் சிந்தித்துப் பார்ப்பது நலம்...அந்த ஒரு ஓட்டையாவது வாக்குச் சாவடி சென்று போட்டோமா என்று சிந்திப்பது கூடுதல் நலம்.!!
நமக்கெல்லாம் " பிக் பாஸ்" மற்றும் கேமரா ..."கடவுள் " ஒருவரே....
கணேசலிங்கம் செண்பகம்
செல்: 9840827369
Friday, 31 March 2017
விமர்சனங்கள்
சாதி வெறி
சாதி, மதம் என்பது...நாடு முழுவதும், வாழையடி வாழையாக..மிகவும் ஆழமாக மனதிலும், இரத்தத்திலும் ஊறிப் போய், புரையோடிவிட்ட அம்சம்..எத்தனையோ தலைமுறைகள் தாண்டியும், பரிணாம வளர்ச்சியில் கூட, மாறாமல் ...கூடவே வளர்ந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டமான விஷயம் தான்...அரசு சலுகைகள் மூலமாக, மாற்றங்கள் வந்துவிடும் என்பதில் கூட...பெரிய பதவிகள்..பொருளாதார ரீதியாக ஓரளவு முன்னேற்றம் தவிர..பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பதும் துரதிர்ஷ்டமே...!!இனம்,மதம்,மொழி,நிறம்,ஊர்,உறவு,நட்பு...போன்ற உணர்வுகள் தாண்டி, "சக மனிதன்" "சக உயிர்"...மீது நல்ல அபிமானமும்,அக்கறையும் ...ஆறரிவு இருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு எப்பொழுது ..ஏற்படுகிறதோ அப்போது தான் சமுதாய நலன் சாத்தியமாகும்.. "ஜனநாயகம்".... "சதந்திரம்"... இவற்றின் உண்மையான மதிப்பு, மரியாதை எல்லாம்... பால, பள்ளிப் பருவத்திலேயே...சொல்லித்தர வேண்டும்...சாதி..இனம்..போன்றவைகள், ஏதோ ஒரு கால கட்டத்தில்...எப்படியோ தோன்றி..புற்றுநோய் போல வளர்ந்து விட்டது....ஆனால் எல்லா மதங்களும்..நல்ல விஷயங்களையும்,நியதிகளையும்,அறவுறைகளையும், அறிவுறைகளையும் தான் சொல்லி இருக்கின்றன...அதன்படி நடக்காமல் தன்னிச்சையாக, சர்வாதிகார,சுயநல,மூட,மூர்க்கத்தனத்துடனும், கண்மூடித்தனமாக காரியங்களில் ஈடுபடுவதாலும் தான்..".ஒரு பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்" என்ற குரூர எண்ணம் ஏற்படுகிறது. அதிலும் கௌரவம் என்ற பெயரில்...காதலுக்குத் தரும் அவமதிப்பு தான் வெட்க கேடு..தம் குடும்பம் தாண்டி மூன்றாம் நபரின் அபிப்பிராயத்திற்கு....தம் பிள்ளைகளின் விருப்பத்தை முன் வைப்பது தான் மகா கேவலமான செயல்....!!
Photographs
வாழ்க்கையில் கடந்து போன பசுமையான நாட்களை...கடந்து வந்த பாதையை, இழந்த இளமையை மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வந்து ..இனிமையான தருணங்களை, நினைவு படுத்தும் அற்புதமான விஷயம்....photographs.!!... Rewind buttons of our life...
சாதி சார்ந்த கவுரவக் கொலைகள்
புள்ளி விரங்களைப் படிக்கும் போதே, நெஞ்சம் கனக்கிறது...The Next Generation... Digital India..என்றெல்லாம்...வந்த பிறகும்... கடந்த ஐந்து ஆண்டுகளில்...இது போன்ற கொடூரங்களின் சதவீதம்.. குறைந்து உள்ளதா என்பது தெரியவில்லை...எத்தனையோ மாற்றங்களும், நாகரீகங்களும்...வாழ்வியல் முறைகளும் மாறிவிட்ட இந்த நவீன காலத்தில்... இன்னும் இது போன்ற கொடூரங்கள் நிகழ என்ன காரணம்?..யார் காரணம்?...படித்த இளைஞர்கள் மத்தியில் கூட இன்னும் விழிப்பணர்வு, மனிதாபிமானம் வளரவில்லையா?....அரசுகள் மனது வைத்தால், சட்ட ரீதியாக தீர்வு காணலாம் ...அதைவிட, தனி மனித மன மாற்றங்கள் மூலம் தான் இந்த அவலங்களைத் தடுக்க முடியும்.... ஆதிக்க உணர்வு என்பது உளவியல் சார்ந்த விஷயமாகி விட்டது...காலப்போக்கில், மெல்ல, மெல்ல மாறி, மறைந்து...ஏதாவது ஒரு கால கட்டத்தில்....மனிதநேயம் தழைத்து ஓங்க வேண்டும்...அவரவர், தத்தம் சாதிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விடுத்து அவரவரின் மதங்களில் சொல்லப்பட்டுள்ள, தர்ம நெறிகளின்படி வாழ்ந்தால்..மனது பக்குவம் அடையும்.
விவசாயிகள் தற்கொலை
ஊழல், கொள்ளை...போன்றவைகள் தான்...எல்லாத் துறைகளிலும்...சகட்டுமேனிக்கு நடந்து வந்தும், நடந்து கொண்டும் தானே இருக்கிறது!...காலம் காலமாக அரசியல்வாதிகளுக்கு வழி காட்டுபவர்கள் அந்த அந்தத் துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தானே?
1000/- 2000/- லஞ்சம் வாங்கி அப்பாவித்தனமாக மாட்டிக் கொள்பவர்கள் மீது தான் நேர்மையாக நடவடிக்கை எடுக்கப்படும்....முதல் முறையாக தலைமைச் செயலாளர் மீதும் ஆக்ஷன் எடுத்ததை....சமீபத்தில் பார்த்தோம்...மற்றபடி ...ரமணா, இந்தியன்,தமிழன்,சிட்டிசன், முதல்வன்...என்று எத்தனை சினிமாக்கள் வந்தாலும்....அதிகாரிகளையும்,அரசியல்வாதிகளையும் தட்டிக் கேட்க...நீதித்துறையும், தேர்தல் கமிஷனும் தான் முன் வர வேண்டும்..
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சொன்னது போல்..."திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"...
அரசியல் அநாகரிகங்கள்
எதிர்மறையான கருத்து என்றாலும்...ஆதங்கத்தில் உண்மை இருக்கிறது..."அறம்"என்ற வார்த்தையை..நம் அரசியல்வாதிகள்..அகராதியில் இருந்தே அழித்து விட்டார்கள்...தமிழ்நாடு மட்டுமல்ல...உலகளாவிய அளவில்...கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும்...சூதுகளும், சூழ்ச்சிகளும் தான்...தொடர்ந்து வென்று கொண்டே இருக்கின்றன... தர்மத்தின் வாழ்வுதனை மீட்டெடுக்க அந்தக் கண்ணன் தான் வர வேண்டும்...!!
காகிதம்
மனிதனின் அரிய கண்டுபிடிப்புகளில்...காகிதமும் ஒன்று..!!...கவிஞர்கள், எழுத்தாளர்கள் மட்டுமன்றி... ஏனய சாமானிய மக்களின்....சந்தோஷங்கள், சுக துக்கங்கள், கோபதாபங்கள், கற்பனைகள்,சமாதானங்கள்...என...எண்ணற்ற உணர்வுகளின் வடிகாலாக காகிதம் இருந்து வந்திருக்கிறது...என்னதான்.... கம்யூட்டர்...வித விதமான கீ போர்டுகள் வந்து விட்டாலும்...காகித்தின் வாசனையே தனி..!!காகிதப் பூக்களில் வாசனை இல்லாமல் இருக்கலாம்...ஆனால்... கரன்ஸி நோட்டு முதல், பள்ளிக் காலத்தில்... அப்பா வாங்கித்தந்த புத்தம்புதிய பாட நோட்டுப் பத்தகங்களின் வாசனை மட்டுமின்றி...தினசரி நாம் வாசிக்கும் நாளிதழ்கள், வார இதழ்களிலும் வாசனையை அனுபவித்ததுண்டு...புத்தகக் கண்காட்சியில் வாங்கி வரும்..புத்தம்புது புத்தகங்களுக்கென்று ஒரு தனி வாசனை உண்டு....
தமிழ்ப் புத்தாண்டு
சில கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள்...நம் முன்னோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்பற்றப்பட்டு,கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன.ஆங்கிலேயரின் ஜனவரி,பிப்ரவரி களை உலகளாவிய முறையில் ஏற்றுக்கொண்டு...கேக் வெட்டி, பட்டாசு வெடித்துக் கொண்டாடும் நாம்...நம்முடைய மதங்கள்,மொழிகள் சார்ந்த விஷயங்களை, அருவருப்பாகப் பார்ப்பதும், பேசுவதும் ஆரோக்கியமான செயல் அல்ல...50 வருடங்களாக...திராவிடன்..ஆரியன் என்று அரசியல் கட்சிகள் தமிழனின் மனதில் துவேஷத்தை விதைத்து....அவர்களின் சொந்தக் குடும்பங்களை, இயக்கங்களை கோடிகளில் புரள வைத்து...தமிழர்களை,சாமான்யர்களின் குடும்பங்களை... தெருக்கோடியில் நிறுத்தி இருக்கின்றன..
.நம்முடைய எத்தனையோ அடையாளங்கள்...காலங்கள் கடந்து காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன சமீபத்திய...."சென்னை வெள்ளம்".."ஏறு தழுவதல்"...போன்ற நிகழ்வுகளே...நம் தழிழர்களின்....மனிதாபிமானம்,மற்றும் வீரம் சார்ந்த தன்னிச்சையான செயல்பாடுகள் ஆகும்...சான்றுகளாகும்..!!.மதம், மொழி, இனம் சார்ந்த விஷயங்களில் துவேஷம் காண்பதை விடுத்து ஒற்றுமை உணர்வோடு செயலாற்றுவோம்...குடி தண்ணீர், விவசாயம், மணல் கொள்ளை, மது ஒழிப்பு போன்ற எவ்வளவோ விஷயங்களைக் கையில் எடுத்கவும்,...அருவருப்பான முறையில் அரசியல் செய்து கொண்டிருக்கும் கட்சிகளை ஓரங்கட்டி...பொருளாதாரத்தை சீரமைக்கவும்...இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளில் சபதம் ஏற்போம்..!!
பசு வதை
பழங்காலத்தில், நரபலி..கொடுப்பது போன்ற குரூரமான வழக்கங்கள் கூடத்தான் இருந்து வந்திருக்கிறது..பரிணாம, நாகரீக வளர்ச்சியின் காரணமாக விலங்குகள் பலி இடப்படுவதைத் தவிர்த்து, தேங்காய், பூசணி,எலுமிச்சம்பழம்...போன்றவற்றை பலி கொடுக்கும் வழக்கம் வந்தது.. ஆடு,மாடு,கோழிகளைக் கூட பலி இடக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு, கிராமங்களில் எழுந்த பலத்த எதிர்ப்பால், பிறகு கை விடப் பட்டது...வாழையடி வாழையாக இரத்தத்திலேயே ஊறி விட்ட சில உணர்வுப் பூர்வமான பழக்க வழக்கங்களை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது....அதே போலத் தான் அவரவரது உணவுப் பழக்கங்களையும் மாற்றச் சொல்லி வற்புறுத்தக் கூடாது...இந்த விஷயத்தில் மதங்களும் மதவாதிகளும்...தலையிடுவதால் தான்...வீண் விவாதங்கள் விளைகின்றன..இந்துக்கள் எல்லோருமே பசுக்களை தெய்வமாகப் பார்ப்பது உண்மை தான்...ஆனால் வைதீக....ஐதீகங்களைக் கடைப்பிடிக்கும் சமூகத்தவர் மிகவும் சிறுபான்மையினர் தான்...மான்களைக் கொல்ல தடை விதித்தது போல, பசுக்களைக் கொல்ல...முன்பே தடை விதித்து இருக்க வேண்டும். பசுவை தேசிய விலங்காக அறிவிக்கத் தவறி விட்டோம்...அதற்காக..பெரும்பான்மையான இந்துக்களின் மனம் புண்படும்படி...குதர்க்கமாக வாதங்கள் செய்வது நியாயம் அல்ல!!...புனித மான வேள்விகள் பற்றி விவாதிப்பதும் சரியல்ல..!! கோடிக்கணக்கான உயிர்களின் நலம் வேண்டி,மழை வேண்டி...மக்களின் நலம் வேண்டி செய்யப்பட்ட யாகங்களில் பலியிடப்பட்ட விலங்குகளையும்,....உணவிற்காகவும், முழுக்க, முழுக்க வியாபாரத்திற்காகவும் அழிக்கப்படும் விலங்குகளையும் ஒப்பிட்டுப் பேசுவதும், விவாதிப்பதும் ஏற்புடையதல்ல..!!
புத்தகங்கள் வாசிப்பு பற்றிய பகிர்வு
புஸ்தகம் வாசிக்கும் வழக்கம்...வாழ்வில் ஒரு வரமாகும். சிறு வயதில், அம்புலிமாமா வாசிக்கத் தொடங்கி, முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி கதைகள், கோகுலம், போன்ற பதிப்புகளை பள்ளி நாடகளில் வாசித்தது பசுமையாக ஞாபகம் இருக்கிறது. நானும் என் மைத்துனன் Marikkannan னும் எங்களுடைய பாக்கெட் மணியில் பாதி பாதி போட்டு சிறுவர் இதழ்கள் வாங்கிப் படிப்போம். என்னுடைய தெய்வத்திரு தர்மலிங்கம் அண்ணன்,வேலை பார்த்த பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொண்டு வந்தது தான் என்னுடைய புத்தக வாசிப்பிற்கு தூண்டுதலாக இருந்தது. என்னுடைய கனம் அப்பா அவரகளும் உள்ளூர் நூலகத்திற்கு அடிக்கடி கூட்டிச் சென்றதுண்டு. பள்ளி முடித்து, 70 களில் சென்னை வந்த பிறகு...எழுத்தாளர் திரு.த.ஜெயகாந்தன் அவர்களின் அறிமுகமும் அருகாமையும் கிடைக்கப் பெற்றது என்னுடைய பாக்கியம்.!! அவருடைய நூல்களைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான் இலக்கியத்தின் சுவையை ரசிக்க முடிந்தது. அதன்பிறகு தான், திரு.தி.ஜானகிராமன், திரு.பாலகுமாரன், திரு.அசோகமித்திரன் போன்றஆதர்ஷன எழுத்தாளர்களின் நாவல்களைத் தேடித் தேடி படிக்க ஆவல் வந்தது. என் வாழ்வின் வெற்றிடங்களை...நிறைத்தது பெரும்பாலும் புத்தகங்களே ஆகும்....சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்திலும், கன்னிமாரா நூலகத்திலும் நிறையப் பொழுதுகளைக் கழித்திருக்கிறேன்...திரு.பாக்கியம் ராமசாமி அவர்களின் அப்புசாமி, சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களைப் பற்றியும், திரு.சுஜாதாவின் கணேஷ் வஸந்த் கேரக்டர்கள் பற்றியும்...இன்றும் என் தம்பி தங்கைகளிடம்...பேசி மகிழ்வதுண்டு.ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்..அபிமான எழத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிப் படிப்பதில் கிடைக்கும் சந்தோஷம் அலாதி. பணி ஓய்விற்குப் பிறகு, வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களைப் படிப்பதற்கு நிறைய நிறைய நேரம் கிடைத்திருக்கிறது...இப்போது தான், திரு.கி.ரரஜ்நாராயணன் அவர்களின் " கோபல்ல கிராமம்" முடித்து, "கோபல்ல புரத்து மக்கள்" படித்துக் கொண்டிருக்கிறேன்......சரித்திர நாவல்களில் திரு.கல்கி அவர்களின் "சிவகாமியின் சபதம்" மட்டும் தான் படித்திருக்கிறேன்..திரு.சாண்டில்யன் அவர்களின் அனைத்துக் கதைகளையும் வாசிக்க ஆசை...(இன்சா அல்லா)...ஆபிஸில்,நண்பர்கள், பணி ஓய்வு தினத்தன்று பரிசாகக் கொடுத்த "தெய்வத்தின் குரல்" அத்தனை பாகங்களையும் வாசித்து விட ஆசை(இன்சா அல்லா..தான்)...மற்றபடி இதுவரை..வண்ணதாசன், வண்ணநிலவன், இரா.முருகன், பிரபஞ்சன்,ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புகளை நிறைய வாசித்து இருக்கிறேன்.திரு.கண்ணதாசன் அவர்களின் "வனவாசம்" நிறைய தடவைகள் படித்திருக்கிறேன்....திரு.வைரமுத்து அவர்களின், கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் வாசித்தாகி விட்டது..."பாரதியார் கவிதைகள் " அவ்வப்போது வாசிப்பது மனதிற்கு உரமாக இருக்கும்....நிறைய புத்தகங்கள் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும், கவிதைகள், கட்டுரைகள் பற்றிப் பகிர்ந்து கொள்ள ஆசைதான்....
-வளரும்.
மனிதம் காப்போம்!
நாத்திகம், ஆத்திகம்...தாண்டி எத்தனையோ வித விதமான... சுவாரஸ்யமான விஷயங்கள், ரசனைகள்,கலாச்சாரங்கள், சங்க இலக்கியங்கள் முதல்....தற்கால புதுக் கவிதைகள் வரை கொட்டிக் கிடக்கின்றன... தனி மனித ஒழுக்கத்தையும், சுதந்திரத்தையும் சீர்குலைக்கும் விதமாக நம்மைச் சுற்றிலும்...கூடவே வன்முறை சார்ந்த ஓர் உலகமும்...காலம் காலமாக ஏதோ ஒரு வடிவத்தில் அச்சுருத்திக் கொண்டோ,துரத்திக் கொண்டோ தானே இருக்கின்றன? "பெண்ணியம்" பற்றி வாதங்கள்....விவாதங்கள் புரியும் நாம் "கண்ணியம்" பற்றியும் நிறையப் பேச வேண்டும்....வெறும் வார்தைகளிலே கூட...எவ்வளவு வன்முறைகளைப் பார்க்கிறோம்!!இங்கே சமூக சீர் திருத்தம் என்பது...தனி மனித நற் சிந்தனைகளில் இருந்து தொடங்க வேண்டும்.."கம்யூனிசம்" "சோஷலிசம்"... போன்ற நற் சிந்தனைகள் கூட...இங்கே சரியான பார்வையில்...பரவலாக்கப் படவில்லையே!!....எனவே...நாத்திகம்;ஆத்திகம் பற்றிப் பேசுவதை விடுத்து...." மனிதம்" பேசுவோம்;காப்போம்!!
புலம்பல்கள்
Life is beautiful...புலம்புவது, புறம் பேசுவது...பிறரைப் பார்த்துப் பொறாமையில் பொங்குவதெல்லாம்...ஏமாற்றத்தைப் போக்கிக் கொள்ளும் வடிகால்களே!!
இல்லாமையும்,இயலாமையும் தான் பல சமயங்களில் வாழ்க்கையில் விரக்தியை உண்டு பண்ணும். உண்மையான ஆத்திகர்களும், உண்மையான நாத்திகர்களும்
அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்களின் மூலம்...பக்குவம் அடைந்திருப்பார்கள்...அவர்கள் ஒரு போதும் புலம்புவதில்லை..
சமூக வலைதளங்கள்
Fb,whatstapp போன்ற சமூக வலைதலங்கள் வருவதற்கு முன்பு தான்...நம்முடைய மனதில் தோன்றும் எண்ணங்களை டைரியில் எழுதி வைத்ததோ அல்லது ..யாராவது தப்பாக நினைப்பார்களோ..என்று எண்ணி, பல விஷயங்களை, நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாமல் மனசுக்குள்ளேயே வைத்துக் கொள்வோம்...அதனாலேயே...நிறைய எழுத்தாளர்கள் கவிஞர்கள்.... வெளி உலகிற்குத் தெரியாமலே போய் விட்டார்கள்..இப்போது தான் சமூக வலைதளத்தில்....தயக்கமின்றி நம் எண்ணங்களை, சந்தோஷங்களை,துக்கங்களை.....உடனுக்குடன் status மூலம்...அல்லது blogger மூலம் வெளிப்படுத்த முடிகிறதே!! அந்த வகையில் சமூக வலைதளங்கள் அனேக சாமான்யர்களுக்கும்...நல்ல வடிகாலாக இருக்கிறது..
மகாக்கவி பாரதியார்
ஆஹா..மகாக்கவி பாரதி பற்றி யார் எழுதினாலும், பேசினாலும், அவருடைய எழுத்துக்களைப் படித்தாலும்.. அவருடைய வீரமும், ஈரமும்,சாரமும் ,சட்டென்று நமக்குள் தொற்றிக் கொள்ளும்.!!உணர்வுபூர்வமான தேசபக்தியோ, சமூக அவலங்களைக் கண்டு, கோபமோ ஒடுக்கப்பட்ட மக்களின் மீது பரிவோ, எல்லாக் கால கட்டங்களிலும் ஏற்படக்கூடிய உணர்வகளைக் குறுகிய தம் வாழ்நாட்களுக்குள் சொல்லி மறைந்நு விட்டார்.
தலித்துக்கள் மீது நடக்கும் வன்முறைகள் குறித்து:
சாதி,மதம்,அரசு,அரசியல் தாண்டி இது போன்ற அருவருப்பான அக்கிரமங்கள் நடப்பதற்குக் காரணம் ...சக மனிதனின் மீது இரக்கமோ, ஈரமோ இல்லாமல் தற்குறித்தனமாக இது போன்ற ஈனத்தனமான செயல்களைச் செய்துவிட்டு தான் சார்ந்துள்ள, சாதி மதம் மீது, பழி சுமத்திவிட்டு, ஜாலியாகச் சுற்றித் திரியும் வேலை வெட்டி இல்லாத பொறுக்கி நாய்களே ஆகும்...மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் காலத்திலிருந்து, சலுகைகள் என்ற வகையிலும், சமத்துவம் என்ற பேரிலும் எவ்வளவு முயற்சிகள், பாதுகாப்புகள் செய்தாலும், சக மனிதநேயம் இல்லாதவரை இது போன்ற சமூக அவலங்களும், காட்டுமிராண்டித் தனங்களும் நடந்து கொண்டே தான் இருக்கும்.படித்த,நாகரீகம் தெரிந்த, சமூகத்தில் பிரபலமானவர்களுக்கு, சகல விதமான வசதிகளுடன்...ஒரு 100 நாட்கள் ஒன்றாக, ஒற்றுமையாக வாழ்வது சாத்தியமில்லாமல் இருக்கும் போது...சாதாரணமான மக்கள்...மத்தியிலும், மாநிலத்திலும்....புற்றுநோய் போல் புரையோடி இருக்கும் லஞ்சம், வஞ்சம்,ஊழல்...இத்யாதி இத்யாதி சூழல்களுக்கு மத்தியில், பண்புகளுடன் வாழ்வதாவது..ஒன்றாவது..தவிர கலாச்சாரம் என்பதெல்லாம்..போராடிப் பெற வேண்டிய பொக்கிஷங்கள் ஆகி விட்டன.!! பரிணாம வளர்ச்சியில்... எத்தனையோ மாறுதல்கள் வந்த போதிலும்...இந்தப் பாழாய்ப்போன சாதியில் மற்றும் ஏன் ஒரு சமநிலை வராமல் உள்ளது?..குற்றவாளிகள் அரசாங்கங்கள் மட்டுமல்ல...மக்களான நாமும் தான்!!