கடந்த முறை சந்தித்த இயற்கையின் சீற்றத்தின் போதும்,ஐல்லிக்கட்டை மீட்க வேண்டி ஒருங்கிணைந்த போதும்,மதம்,ஜாதி,மொழி தாண்டிய ஒற்றுமையை உணர்ந்தோம்.தமிழக மக்களிடையே எந்தப் பாகுபாடும்,வேறுபாடும் இல்லை என ஆணித்தரமாக உறுதி ஆயிற்று..ஆனால் நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும்,நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் அவரவரது கடமைகளை அன்றாடம் ஒழங்காகச் செய்யாமல், சாதாரணமாகப் பெய்யும் பருவமழையினைக் கூட சரியான விதத்தில் எதிர்கொள்ளாமல், மக்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள்.
ஊடகங்களில் எது உண்மை என்பதே தெரியவில்லை. அனைத்து மதங்களும்,சமயங்களும் மனிதம் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவே வலியுறுத்தி இருக்கின்றன. தங்களை அறிவுஜீவிகளாக நினைப்பவர்களும், பகுத்தறிவாளர்களாக காட்டிக் கொள்பவர்களும். எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும்....ஆதிசங்கரர், இராமனுஜர்,மத்வாச்சாரியார், மகாப்பெரியவர் போன்ற மகான்கள் கட்டிக் காத்த இந்து மத த்தின் தற்போதைய தலைவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் நாவடக்கத்தோடு பேசுவது மட்டுமின்றி....தேச,உலக அமைதிக்கான காரியங்களில் மட்டுமே பாடுபட வேண்டும் என்பதே என் போன்ற சாமான்ய இந்திய இந்துக்களின் தாழ்மையான வேண்டுகோள்....
கணேசலிங்கம் செண்பகம்
கே.கே.நகர், சென்னை78
செல்:9840827369
No comments:
Post a Comment