Wednesday, 23 August 2017

இன்றைய தலைமுறை

சின்னச் சின்ன விஷயங்களில் பிடிவாதம் என்பது, சிறுவயதிலேயே பழகிவிட்ட தீய குணங்களில் ஒன்று. தவிர...இக்காலத்து இளம் தலைமுறையினருக்கு, சொல் புத்தி சுத்தமாகப் பிடிப்பதில்லை...சுயபுத்தி தமக்கு நிறையவே இருப்பதாக எண்ணிக் கொண்டு பல தருணங்களில் இது போல குடும்பத்தினரிடம்  மட்டுமின்றி, அலுவலகத்தில்,நண்பர்களிடத்தில், புகுந்த வீட்டில் என்று எல்லா இடங்களிலும் வாக்குவாதம் செய்து பரஸ்பரம் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்..அடிப்படையில், குழந்தைப் பருவத்தில் பெற்றோர் செல்லம் கொடுத்து வளர்ப்பது ஒரு காரணமாக இருந்தாலும்,வளர வளர...ego, ஆளுமை என்ற பெயரில் தான் தோன்றித் தனமாக நடந்து கொள்கிறார்கள். முன்பெல்லாம் பள்ளிகளில் "நீதி போதனை" என்று வாரத்தில் ஒரு பீரியட் இருக்கும் .வீடுகளும் கூட்டுக் குடும்பமாக இருந்த காலங்களில் தாத்தா பாட்டி, அத்தை சித்தப்பா,பெரியப்பா என்று பந்தமும், பாசமும் சூழ...பெரியர்களிடம் "மரியாதை" செலுத்தும் குணம் இயல்பாகவே அமையப் பெற்றிருக்கும்....இன்றைய தலைமுறையினர் கல்வி,தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று பல விதங்களிலும் நிறையவே முன்னேறி இருந்தாலும்...."குணங்கள் " "கலாச்சாரம்" என்பது வேறுவிதமாக மாறிவிட்டது...பெரியவர்கள் தான்...எல்லாத் தருணங்களிலும் விட்டுக் கொடுத்து வாழ வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டிருக்கிறார்கள்...இது தான் நிதர்சனம்...ஆனால் இன்றைய தலைமுறையினர் நல்லவர்களாகவும்,வல்லவர்களாகவும் தான் இருக்கிறார்கள் என்பதற்கு... சமீபத்திய "சென்னை வெள்ள நிவாரணம்" "ஜல்லிக்கட்டு அறவழிப் போராட்டம்" இரண்டு நிகழ்வுகளும் நம்பிக்கையான உதாரணங்கள்....நம் அரசியல்வாதிகளும், அரசாங்கங்களும் நேர்மையாக இருந்திருந்தால்...நம் இளைஞர்கள் நம் நாட்டை எப்பொழுதோ வல்லரசாக மாற்றியிருப்பார்கள்...!!

கணேசலிங்கம் செண்பகம்
செல்: 9840827369

No comments:

Post a Comment