Tuesday 25 September 2018

ஜாதி...ஜாதகம்

நாம் வாழும் இந்த சமூகத்தில் உள்ள எத்தனையோ துயரங்களில் ... வயதையும்,வாழ்வையும் தொலைத்து விட்டு மனம் வெதும்பி வாழ்ந்து கொண்டிருக்கும், பெண்களையும்... ஆண்களையும் நம் சொந்தங்களிலும்,நட்பு வட்டங்களிலும் பார்த்துக் கொண்டு வாழ்வது மனதிற்கு மிகுந்த வேதனையாகத்தான் இருக்கிறது.குடும்பத்தில் முதலாவதாகப் பிறந்துவிட்டதால் இது போன்ற சூழல் நிகழ்வது மட்டுமின்றி,காதல் தோல்வி,குடிகார அப்பா,பொறுப்பற்ற பெற்றோர் மட்டுமின்றி...அனாவசியமான கண்டிஷன்கள் போட்டு...எதிர்பார்த்த வாழ்க்கை அமையாமல் வாழ்வைத் தொலைத்தவர்களும் உள்ளனர். இன்னொரு மிக முக்கியமான காரணம்...ஜாதகம் பார்த்து... செவ்வாய் தோஷம், நட்சத்திரம் சரியில்லை....பொருத்தமில்லை என்று சொல்லி எத்தனையோ திருமணங்கள் தடைபட்டு...பிள்ளைகள் பாதிக்கப் படுகின்றனர்...ஜாதி..கிளை..என்ற காரணங்களால் வயதையும் வாழ்க்கையையும் தொலைத்தவர்களும் ஏராளம்....இந்த முகநூல் மூலம் ...முகம் தெரியாமல் எத்தனையோ பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நாம்...இந்த ஜாதி...ஜாதகம், அந்தஸ்து போன்றவற்றில் இருந்து விலகி பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை தேடித்தர முன் வருவோம்!!

Sunday 19 November 2017

ஐனநாயகச் சீர்திருத்தம்

உண்மை தான்....காலம் காலமாக ஒரு கருத்தை...சரியா தவறா என்று அறியாமல்....தமக்குப் பிடித்த தலைவரோ,நடிகரோ,பிரமுகரோ சொல்லி விட்டால் அப்படியே நம்பிவிடுவது மட்டுமில்லாமல்....அரசாங்கத்தையே அல்லவா தாரை வார்த்தோம்...ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மாறி..மாறி...கலை உலகத்தினரை கடவுள் போல் பாவித்தோம்...ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எதிர்க் கேள்வி கேட்கவும் அதே கலை உலகம் சார்ந்தவரையே நம்பினோம்.....கமல் அவர்களின் கூற்றில் கம்யூனிசமும் கலந்திருப்பதால், வார்த்தை ஜாலங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.நாட்டில் குற்றங்கள் என்பது,பொருளாதாரம் தாண்டி,கிட்டத்தட்ட அனைத்து மட்டங்களிலும் புற்று நோய் போலப் புரையோடிக் கிடக்கிறது. எஞ்சின் ,பெட்டிகள் மட்டுமின்றி,தண்டவாளங்களும்...சீர் செய்யப்பட்டால் தான் ஜனநாயகம் எனும் ரயில் சீராக ஓடும்.

Sunday 5 November 2017

இந்து தர்மம்

கடந்த முறை சந்தித்த இயற்கையின் சீற்றத்தின் போதும்,ஐல்லிக்கட்டை மீட்க வேண்டி ஒருங்கிணைந்த போதும்,மதம்,ஜாதி,மொழி தாண்டிய ஒற்றுமையை உணர்ந்தோம்.தமிழக மக்களிடையே எந்தப் பாகுபாடும்,வேறுபாடும் இல்லை என ஆணித்தரமாக உறுதி ஆயிற்று..ஆனால் நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும்,நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் அவரவரது கடமைகளை அன்றாடம் ஒழங்காகச் செய்யாமல், சாதாரணமாகப் பெய்யும் பருவமழையினைக் கூட சரியான விதத்தில் எதிர்கொள்ளாமல், மக்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள்.
ஊடகங்களில் எது உண்மை என்பதே தெரியவில்லை. அனைத்து மதங்களும்,சமயங்களும் மனிதம் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவே வலியுறுத்தி இருக்கின்றன. தங்களை அறிவுஜீவிகளாக நினைப்பவர்களும், பகுத்தறிவாளர்களாக காட்டிக் கொள்பவர்களும். எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும்....ஆதிசங்கரர், இராமனுஜர்,மத்வாச்சாரியார், மகாப்பெரியவர் போன்ற மகான்கள் கட்டிக் காத்த இந்து மத த்தின் தற்போதைய தலைவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் நாவடக்கத்தோடு பேசுவது மட்டுமின்றி....தேச,உலக அமைதிக்கான காரியங்களில் மட்டுமே பாடுபட வேண்டும் என்பதே என் போன்ற சாமான்ய இந்திய இந்துக்களின் தாழ்மையான வேண்டுகோள்....

கணேசலிங்கம் செண்பகம்
கே.கே.நகர், சென்னை78
செல்:9840827369

Wednesday 25 October 2017

கடன்

நம்மில் ஏராளமானோர் வாழ்க்கையில் இது போலப் போராடிக் கொண்டே தான் இருக்கிறோம்..."கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் "...ஞாபகம் வருகிறது...சாமான்ய மக்களின் தேவைகளையும்,சூழ்நிலைகளையும் ,தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு, அநியாய வட்டி வாங்குவது ,சேட்டுகள்,ரவுடிகள் மட்டுமல்ல..கலர் கலராக...கிரெடிட் கார்டு களை நம்மிடம் கொடுத்து விட்டு..கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கும் வங்கிகளும் தான்....ஆனால் நாம் உணர வேண்டியது..." தீதும் நன்றும் பிறர் தர வாரா"....

Monday 16 October 2017

காதல்

கண்களும் காதலும் கற்பனையும் ஒன்றை யொன்று ஈர்ப்பதால் தானே கவிதையே பிறக்கிறது..இப்புவி உயிர்ப்புடன் இருப்பது...உயிர்களின் காதலால் தானே...

Thursday 28 September 2017

ஆண்மை, பெண்மை, ஆளுமை

ஆண்மை,பெண்மை ...இரண்டிற்குமே வெவ்வேறு விதமான தனித்தன்மைகள் உள்ளன.ஆளுமை குறித்துப் பேசும் போது தான் சர்ச்சைகள் தோன்றுகின்றன.
"ஆண்மை தவறேல்" என்று கூறிய பாரதி தான்..."மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்ய வேண்டும்" எனவும் "மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோவோம்" என்றும் கூறினார்...எது உயர்ந்தது ...தேவை என்பதெல்லாம் காலம்,தேசம்,இனம்...இன்ன பிற சூழல்களைப் பொறுத்து மாறுபடும்;வேறுபடும்...மிஷ்கின், திரையுலகில் மாறுபட்ட கருத்துகள் கொண்டவர்..பாடல் இல்லாமல், வசனமே இல்லாமல் படங்கள் வருவதெல்லாம் ஒரு பரிசோதனையே..!..இதில் ஆண்மை...பெண்மை..ஆளுமை குறித்த ஏற்றத் தாழ்வுகளை ஏன் இழுக்க வேண்டும்!

-கணேசலிங்கம் செண்பகம்

Monday 25 September 2017

ஈகோ...

"Ego" என்பது இறங்கி வராமல் இருப்பது; "தன்மானம்" என்பது இறங்கி விடாமல் இருப்பது.! ..வேறுபாடு புரியாமல் தான் நம்மில் பலர் நல்ல உறவுகளையும், நட்புகளையும் இழக்கிறோமோ!!