Sunday, 19 November 2017

ஐனநாயகச் சீர்திருத்தம்

உண்மை தான்....காலம் காலமாக ஒரு கருத்தை...சரியா தவறா என்று அறியாமல்....தமக்குப் பிடித்த தலைவரோ,நடிகரோ,பிரமுகரோ சொல்லி விட்டால் அப்படியே நம்பிவிடுவது மட்டுமில்லாமல்....அரசாங்கத்தையே அல்லவா தாரை வார்த்தோம்...ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மாறி..மாறி...கலை உலகத்தினரை கடவுள் போல் பாவித்தோம்...ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எதிர்க் கேள்வி கேட்கவும் அதே கலை உலகம் சார்ந்தவரையே நம்பினோம்.....கமல் அவர்களின் கூற்றில் கம்யூனிசமும் கலந்திருப்பதால், வார்த்தை ஜாலங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.நாட்டில் குற்றங்கள் என்பது,பொருளாதாரம் தாண்டி,கிட்டத்தட்ட அனைத்து மட்டங்களிலும் புற்று நோய் போலப் புரையோடிக் கிடக்கிறது. எஞ்சின் ,பெட்டிகள் மட்டுமின்றி,தண்டவாளங்களும்...சீர் செய்யப்பட்டால் தான் ஜனநாயகம் எனும் ரயில் சீராக ஓடும்.

Sunday, 5 November 2017

இந்து தர்மம்

கடந்த முறை சந்தித்த இயற்கையின் சீற்றத்தின் போதும்,ஐல்லிக்கட்டை மீட்க வேண்டி ஒருங்கிணைந்த போதும்,மதம்,ஜாதி,மொழி தாண்டிய ஒற்றுமையை உணர்ந்தோம்.தமிழக மக்களிடையே எந்தப் பாகுபாடும்,வேறுபாடும் இல்லை என ஆணித்தரமாக உறுதி ஆயிற்று..ஆனால் நம்மால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும்,நம் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் அவரவரது கடமைகளை அன்றாடம் ஒழங்காகச் செய்யாமல், சாதாரணமாகப் பெய்யும் பருவமழையினைக் கூட சரியான விதத்தில் எதிர்கொள்ளாமல், மக்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள்.
ஊடகங்களில் எது உண்மை என்பதே தெரியவில்லை. அனைத்து மதங்களும்,சமயங்களும் மனிதம் தாண்டி அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவே வலியுறுத்தி இருக்கின்றன. தங்களை அறிவுஜீவிகளாக நினைப்பவர்களும், பகுத்தறிவாளர்களாக காட்டிக் கொள்பவர்களும். எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும்....ஆதிசங்கரர், இராமனுஜர்,மத்வாச்சாரியார், மகாப்பெரியவர் போன்ற மகான்கள் கட்டிக் காத்த இந்து மத த்தின் தற்போதைய தலைவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் நாவடக்கத்தோடு பேசுவது மட்டுமின்றி....தேச,உலக அமைதிக்கான காரியங்களில் மட்டுமே பாடுபட வேண்டும் என்பதே என் போன்ற சாமான்ய இந்திய இந்துக்களின் தாழ்மையான வேண்டுகோள்....

கணேசலிங்கம் செண்பகம்
கே.கே.நகர், சென்னை78
செல்:9840827369