Sunday, 8 October 2023

நலம்;நலமறிய ஆவல்...

பிள்ளையார் சுழி போட்டு

அன்புள்ள...

நலம்;நலம் அறிய ஆவல்...என..

குணா...கமல் பாணியில்...கண்மணி...அன்போட..காதலன்...நான்...நான்...எழுதும் லெட்டர்..மடல்...கடுதாசினு...வச்சுக்கலாமா...இல்ல.. கடிதம்..னே இருக்கட்டும்...என்று....யாருக்காவது..கடிதம் எழுதலாம்... என்று..ஆசையாக இருக்கிறது...

கடைசியாக... யாருக்கு..நாம்..கடிதம் எழுதிப் போட்டோம்...என்பதும்...யாரிடம் இருந்து...நமக்கு கடிதம் வந்த து....என்றும்....எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும்... ஞாபகம் வரவில்லை..

நான்..சொல்ல வருவது...இ-மெயில்..பற்றியோ..கூரியர் தபால் பற்றியோ அல்ல... பிரியமானவர்களுக்கு...அஞ்சலகம் சென்று...ஆசை ஆசையாய் ...எழுதி சிவப்பு நிறப் பெட்டியில்..நேரம் பார்த்துப் போஸ்ட் செய்த...நம் இன்லேண்டு...லெட்டர் பற்றியும்...காக்கி/ப்ரௌன்...கலர் யூனிஃபார்மில்....நம் பிரியமானவர்களிடமிருந்து நமக்குக் கடிதம் கொண்டு வந்து தரும்...தபால்கார ருக்காக..அவரது சைக்கிளின் மணி ஓசைக்காக..ஆவலுடன் காத்திருந்த தருணங்கள்..பற்றியும் ஆகும்.

கடிதம்...எழுதுவது என்பது ஒரு கலை..

தகவல் தொடர்பு என்பது...மனித வாழ்க்கையில்.... மகிழ்வுகள், துக்கங்கள்...முதலான அனைத்து நிகழ்வுகளையும், செய்திகளையும்,கால,நேர,தூரங்கள்...கடந்து ...உறவுகளை,நட்புகளை....உயிர்ப்புடன் வைத்திருக்கும்....உன்னதமான செயலாகும்... புராண காலங்களிலும், மன்னர்களின் காலத்திலும் கூட...புறா விடு தூது, மேக தூது...போன்ற நிகழ்வுகள் நடந்த வரலாறு உண்டு.

மன்னர்கள்,..ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதி தகவல்களை தூதுவர்கள் மூலம் அனுப்பி் பிற நாட்டு மன்னர்களுடன்,பரஸ்பரம் தொடர்பு கொண்டிருந்தனர்

பின்னாட்களில், காகிதம், பேனா,பென்சில் போன்ற எழுது பொருட்களின் வருகைக்குப்பின்...செய்திப் பரிமாற்றங்கள்..வெகுவாக மட்டும் இன்றி, விரைவாகவும் நடைபெறத் துவங்கின.

சாமான்ய, பாமர மக்களுக்கும் "கடிதம்" அல்லது "மடல்" என்ற மந்திரச் சொற்கள் அறிமுகம் ஆகின
அரசாங்கம்... கடிதப் போக்குவரத்திற்காக..அஞ்சல் துறையை நிறுவி, நகரங்கள் தோறும், அஞ்சலகங்கள் நிறுவி அரிய சேவையை அற்புதமாக செய்ய ஆரம்பித்தது.

உறவினர்கள், நண்பர்கள்... ஒருவர் மற்றவருடன்...கடிதங்கள் வாயிலாக, நல விசாரணை மட்டுமின்றி, நேரில் பேசத் தயங்கிய விஷயங்களைக் கூட...பகிர்ந்து கொள்ளமுடிந்தது.

படிப்பு, பணி நிமித்தமாக, தொலை தூரத்தில்...விடுதிகளில் தங்கியிருக்கும் பிள்ளைகளுக்கும்...சரி...பெற்றோர்களுக்கும்..சரி...பரஸ்பரம்.... கடிதங்களைப் படிக்கும் போது...நேரிலேயே பார்க்கக் கூடிய சந்தோஷம் கிடைக்கும்...ஆனந்தக் கண்ணீர் பெருகும்; பல வீடுகளில்,தொலைவில் இருக்க நேரும் சந்தர்ப்பங்களில் கணவன்-மனைவி..இருவரும்..பரஸ்பரம்..கடிதங்களிலேயே குடும்பம் நடத்துவது உண்டு.

காதலர்களுக்கோ....சொல்லவே வேண்டாம்....போஸ்ட்மேன் வருகைக்காக....மனைவியின் பிரசவ அறையின் வாசலில்.... குறுக்கும், நெடுக்கும் நடக்கும் கணவரைப் போல...பரிதவிப்பார்கள்....கடிதம் கொண்டு வரும் போஸ்ட்மேன்....கடவுள் போல காட்சியளிப்பார்...கடிதங்களில் கொடுக்கப் பட்டிருக்கும் முத்தங்களைக் கண்டு மெய் சிலிர்ப்பார்கள்...சில கடிதங்கள்...திரும்பத்திரும்ப...பல நூறு முறை படிக்கப்படும்; பல வருடங்கள் பாதுகாக்கப் படும்....பல சமயங்களில்... போஸ்ட்மேன் வேலையை.. உற்ற நண்பர்கள்...தம்பி,தங்கைகள் கூட செய்வதுண்டு

மேகத்தைப் போன்ற...நீல வண்ணத்தில் இருக்கும்..அந்தக் கடிதத்தின்...வாசனை...கரன்ஸியின் வாசனையை ஒத்து இருக்கும்.

சிலருடைய கடிதங்கள்...வாசிப்பதற்கு கவிதைகள் போலவும் இருக்கும்.;இலக்கியமாக வும் மாறுவதுண்டு.

சில,தினசரி,வார,மாதப் பத்திரிகைகளில்...வாசகரின் கடிதங்களை விரும்பிப் படிப்பவர்கள் உண்டு. வாசகர்கள், பத்திரிகை ஆசிரியருக்கு எழுதிய கடிதங்கள் மூலம்...எத்தனையோ, சமூக, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதுண்டு.

பிரபலமான எழுத்தாளர்கள், தலைவர்களுடைய கடிதங்கள்....புஸ்தக வடிவமாக வெளிவந்த நிகழ்வுகள கூட  உண்டு.

பல நாடுகளிலும்...மியூசியங்களில்,மறைந்த அந்நாட்டு தலைவர்கள் கைப்பட எழதியுள்ள கடிதங்கள்...பொக்கிஷமாகப் பாதுகாக்கப் படுவதுண்டு.

ஆனால், அசுர வேகத்தில் மாறிவரும் .. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ...."கடிதம் "...என்ற....அந்த மந்திரக் காகிதம் கூட ...மியூசியத்தில்...." காட்சி " ப் பொருளாக மாறக்கூடிய....காலம்...வெகுதூரம் இல்லை.

அதே போல ..."போஸ்ட் கார்டு"...என்று அழைக்கப்படும்...மஞ்சள் வண்ண அஞ்சல் அட்டைகளையும், மறக்க முடியாது...மலிவுவிலையில் விற்கப்படும் அந்த அட்டை தனியாக வும்...reply card..என்ற வடிவிலும் கிடைப்பதுண்டு...முக்கியமான செய்திக்கு உடனடியாக பதில் வேண்டுபவர்களுக்கு....பதில் எழுதுபவர்கள்....அஞ்சலகம் தேடி ஓடாமல்...இணைக்கப் பட்டிருக்கும் reply card ல், உடனடியாக பதில் எழுதி...அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் சேர்த்து விடுவார்கள்

மங்களகரான விஷயங்களைத் தாங்கி வரும் கடிதங்களின் நான்கு ஓரங்களிலும்...மஞ்சள் தடவப் பட்டிருக்கும்...மறைந்துவிட்ட...தாத்தா,பாட்டி,அப்பா,அம்மா, உறவினர்கள், நண்பர்களுடய கடிதங்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருப்பவர்கள் அனேகம் பேர் உண்டு...அவ்வப்போது அவற்றை எடுத்து வைத்து படித்து..மலரும் நினைவுகளில் மூழ்குவதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.

நம்முடைய தபால் தந்தி துறை.... சமீபத்தில்...."தந்தி"என்ற... அற்புதமான சேவையை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தொலை பேசி, கைப்பேசி...இணைப்புகள்....மலிந்து விட்ட இந்தக் காலத்தில்..,e-mail,.SMS, Whatsapp...போன்ற வசதிகள் வந்து விட்டதால்...நொடிப் பொழுதில் தகவல்கள் மட்டுமன்றி,,, புகைப்படங்கள், ஆவணங்கள், வீடீயோ முதலானவைகளை உலகத்தின் எந்த மூலைக்கும்...உடனுக்குடன் பரிமாரிக் கொள்ள முடிகிறது...

அதே நேரத்தில் ,காத்திருத்தல்,பொறுமை காத்தல்,சகிப்புத்தன்மை....
போன்ற அருங் குணங்கள்...நம்மிடமிருந்து..விலகி விட்டன..மனைவி,மற்றும்,நண்பர்களிடமிருந்து....உடனுக்குடன்... எதிர்பார்க்கும்...தகவல்கள் வரத் தாமதமானால்...தவிப்பும், பட படப்பும்...அதிகமாகி விடுகிறது...

அந்தக் காலத்தில்... டெலிபோன்...எனும் ...தொலைபேசி வசதி என்பது....சாமானிய மக்களுக்கு சாத்தியப்படவில்லை.ஒருவர் கடிதம் எழுதினால்..பதில் வருவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் உறவுகளின்....ஏர்மெயில்...கடிதப் போக்கு வரத்திற்கு குறைந்த பட்சம்..இரண்டு வாரங்கள் பொறுமை காக்க வேண்டும்.

ஆனால்....கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில்... யாருக்கெல்லாம்....எழுதியிருக்கிறோம்!....யாரிடமிருந்தெல்லாம்...நமக்கு  கடிதம்வந்தருக்கிறது என்று நினைத்துப் பார்க்கையில்.. மனதிற்கும், நினைவிற்கும்...மகிழ்வாக உள்ளது்

நம் பிரியத்துக்கு உரியவர்களுக்கு கடிதம் எழுத உட்காரும் போதே..மனதி்ல்....ஒரு சந்தோஷமும்..உற்சாகமும்...தொற்றிக் கொள்ளுமே..அதை ..அனுபவித்தவர்கள்....மட்டுமே..புரிந்து கொள்ள முடியும்.

அடுத்தபடியாக...
எப்படி...எழுத ஆரம்பிப்பது என்பதில் தான்...எத்தனை..வித விதமான வார்த்தைகள்!!
யாருக்கு..எப்படி...எழுத வேண்டும்...என்று...பள்ளிப் பருவத்திலேயே...படித்திருப்போமே!!

பெருமதிப்பிற்குரிய
மதிப்பிற்குரிய
அன்புள்ள
என் உயிரினும் மேலான...

மகாராஜ.. ராஜஸ்ரீ
சுவாமி...தேவி்....என்றெல்லாம்..ஆரம்பித்து....

நலம்; நலமறிய ஆவல்....
மற்றும்.....வீட்டில், ஊரில்...அக்கம்பக்கத்து வீடுகளில்..உள்ளவர்களது நலம் மட்டுமன்றி... வீட்டில் வளர்க்கப்படும்....ஆடு,மாடு,பூனை,கோழியின்...நலங்கள் பற்றி எல்லாம் விசாரித்து.....விபரங்களை...விலாவாரியாக.. கடித த்தின்...கடைசி மடிப்பு வரை...நுணுக்கி, நுணுக்கி எழுதி...குல தெய்வத்தின் துணை வேண்டும் என எழுதி முடிப்பார்கள்

கிராமங்களில்... கடிதம் கொண்டு செல்லும் ...போஸ்ட்மேனை யே..படித்துக் காட்டச் சொல்வார்கள்...இதில் வேடிக்கை என்னவென்றால்.... கடித த்தில்...போஸ்ட் மேனைப் பற்றி விசாரித்து எழுதியிரா விட்டால்...அவர்...உரிமையுடன்...கோபித்துக் கொள்வதும் உண்டு

இந்தப் பதிவின் நோக்கம்:-நமக்கு மிகவும்.. பரிச்சியமான...ஒரு விஷயம்..நாம் வாழும் காலத்திலேயே...காலத்தின் கட்டாயத்தினாலோ...விஞ்ஞான வளர்ச்சியினாளோ...இன்ன பிற காரணத்தினாலோ...மாறவோ அல்லது மெல்ல மெல்ல மறையவோ செய்யும்போது...நன்றி உணர்வுடன்...அவற்றை நினைவு கூற வேண்டும் என்பதே ஆகும்.

மற்றும்..நம் அடுத்த தலைமுறை யினருக்கும்...இப்படியெல்லாம்..சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்திருக்கின்றன...நடந்திருக்கின்றன.. என்பதைத் தெரியப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தான்!!

மாற்றம் ஒன்றே...மாறா தது!!

என்றென்றும் அன்புடன்,

கணேசலிங்கம் செண்பகம்
கே.கே.நகர், சென்னை-78
செல்- 98408 27369

21 comments:

  1. அருமையான பதிவு. . .
    😊😊😊😊😊😊😊😊😊😊😊

    ReplyDelete
  2. அருமையான பதிவு. . .
    😊😊😊😊😊😊😊😊😊😊😊

    ReplyDelete
  3. Really .. This s a wonderful article which have portrayed the essence of letter writing.... Heartful Wishes on your first blog post uncle .. The knowledge and facts that must be passed on to our next generation is very important and definitely we must ensure these info are passed on. Thankyou for your wonderful imprint on this topic.... Continue to rock ...

    ReplyDelete
  4. Appa, kalakiteenga! Inime unga Adutha topic ku wait pannuven.. Romba arpudhama, elimaya karuthugala sollirkeenga.. Super ☺️🙏 -
    Regards, Abi

    ReplyDelete
    Replies
    1. Ganesa,it is really very nice.My heartiest congratulations to you .I did not expect this much from you.I really wonder, how you could write like this.It looks like an article, written by a Great and a Professional Writer.I hope you have achieved this talent through your habit of reading Books continuously.Please keep on writing like this.I am so proud of you.My very best wishes and blessing to you Ganesa .

      Delete
    2. Thank you very much Anne.. I am very much impressed about your comments..Nammudaya Appa avargalin...blessings kedacha mathiri...feel paanen...

      Delete
  5. Appa, kalakiteenga! Inime unga Adutha topic ku wait pannuven.. Romba arpudhama, elimaya karuthugala sollirkeenga.. Super ☺️🙏 -
    Regards, Abi

    ReplyDelete
  6. எதார்த்தத்தையும் இவ்வளவு அழகாக சொல்ல முடியம் என்று நிரூபித்து விட்டீர்கள் அண்ணா.
    அடுத்தது என்ன? என்று காக்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  7. வணக்கம் சித்தப்பா முதன் முதலில் வாங்கிய தபால் அட்டை எவ்வளவு,எப்பொழுது

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்து..70 களில்,.தபால் அட்டையின் விலை..6 பைசா,80களில்,10 பைசா....பிறகு பல வருடங்கள் 15 பைசா வாக இருந்தது.. தற்பாது..50 பைசா என்று நினைக்கிறேன்

      Delete
    2. எனக்குத் தெரிந்து..70 களில்,.தபால் அட்டையின் விலை..6 பைசா,80களில்,10 பைசா....பிறகு பல வருடங்கள் 15 பைசா வாக இருந்தது.. தற்பாது..50 பைசா என்று நினைக்கிறேன்

      Delete
  8. வணக்கம் சித்தப்பா முதன் முதலில் வாங்கிய தபால் அட்டை எவ்வளவு,எப்பொழுது

    ReplyDelete
  9. I curse myself for reading it so late !!! Wow , memories flew and butterflies every where chithapa 😍😍😍. I really wish I write a letter to all my loved ones ! I miss writing it ! I still remember writing many such letters ! And yes as you rightly mentioned it gives more impact than the latest technologies !! Wah , what a feeling to wait for the reply weeks together 😍😍😍!!
    Am sure that this article will rekindle the desire or just reignite the passion to write letters !!!
    Love you ,
    Chachu 😘😘

    ReplyDelete
  10. Thank you Kannu.. Better late than never... I was eagerly waiting for your wordings.

    You have given lovely comments.
    Thank you pa..with lots of love...

    நாந்தேன்..

    ReplyDelete
  11. Thank you Kannu.. Better late than never... I was eagerly waiting for your wordings.

    You have given lovely comments.
    Thank you pa..with lots of love...

    நாந்தேன்..

    ReplyDelete
  12. அருமை...மாமா ..இம்மடல் ...இதய மடல்களில் ஆட்சி செய்கிறது ..👏👏👏👏

    ReplyDelete