Tuesday, 25 September 2018

ஜாதி...ஜாதகம்

நாம் வாழும் இந்த சமூகத்தில் உள்ள எத்தனையோ துயரங்களில் ... வயதையும்,வாழ்வையும் தொலைத்து விட்டு மனம் வெதும்பி வாழ்ந்து கொண்டிருக்கும், பெண்களையும்... ஆண்களையும் நம் சொந்தங்களிலும்,நட்பு வட்டங்களிலும் பார்த்துக் கொண்டு வாழ்வது மனதிற்கு மிகுந்த வேதனையாகத்தான் இருக்கிறது.குடும்பத்தில் முதலாவதாகப் பிறந்துவிட்டதால் இது போன்ற சூழல் நிகழ்வது மட்டுமின்றி,காதல் தோல்வி,குடிகார அப்பா,பொறுப்பற்ற பெற்றோர் மட்டுமின்றி...அனாவசியமான கண்டிஷன்கள் போட்டு...எதிர்பார்த்த வாழ்க்கை அமையாமல் வாழ்வைத் தொலைத்தவர்களும் உள்ளனர். இன்னொரு மிக முக்கியமான காரணம்...ஜாதகம் பார்த்து... செவ்வாய் தோஷம், நட்சத்திரம் சரியில்லை....பொருத்தமில்லை என்று சொல்லி எத்தனையோ திருமணங்கள் தடைபட்டு...பிள்ளைகள் பாதிக்கப் படுகின்றனர்...ஜாதி..கிளை..என்ற காரணங்களால் வயதையும் வாழ்க்கையையும் தொலைத்தவர்களும் ஏராளம்....இந்த முகநூல் மூலம் ...முகம் தெரியாமல் எத்தனையோ பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நாம்...இந்த ஜாதி...ஜாதகம், அந்தஸ்து போன்றவற்றில் இருந்து விலகி பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை தேடித்தர முன் வருவோம்!!